அடுத்த அன்னதான நிகழ்வு - 06/04/2025.

மாயக்கரம் பிரார்த்தனைகள் - 24/04/23

  மாயக்கரம் பிரார்த்தனைகள்..

1. ஸ்ரீ குருப்யோ நமஹ

     பல ஆண்டுகளாக திருமணத்திற்காக வரன் தேடிக் கொண்டு இருக்கும் எனது அண்ணனுக்கு விரைவில் நல்லதொரு வரன் அமைந்து திருமணம் நடக்க எல்லாம் வல்ல இறைவனையும் ஞானிகளையும் சித்தர்களையும் குருமார்களையும் பிரார்த்தனை செய்துகொள்ளுமாறு பாதம் பணிந்து வேண்டுகிறேன்.

2. எனது இளைய சகோதரருக்கு நல்ல உடல் நலமும் மன நலமும் ஆன்ம பலமும் கிடைத்திடவும் விரைவில் ஒரு வேலை வாய்ப்பு / தொழில் வாய்ப்பு அமைந்து வாழ்வில் ஏற்றம் காணவும் எல்லாம் வல்ல இறைவனையும் சித்தர்களையும் ஞானிகளையும் குருமார்களையும் பிரார்த்தனை செய்துகொள்ளுமாறு பாதம் பணிந்து வேண்டுகிறேன்.

3. வாழ்வின் அடுத்த கட்டங்களுக்கு முன்னேற நான் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவனையும் ஞானிகளையும் சித்தர்களையும் குருமார்களையும் பிரார்த்தனை செய்துகொள்ளுமாறு பாதம் பணிந்து வேண்டுகிறேன்.

4. நண்பர் ஒருவருக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சனைகள் நீங்கி வாழ்வில் வளமும் நலமும் பெற எல்லாம் வல்ல இறைவனையும் ஞானிகளையும் சித்தர்களையும் குருமார்களையும் பிரார்த்தனை செய்துகொள்ளுமாறு பாதம் பணிந்து வேண்டுகிறேன்.

5. தாயாருக்கு ஏற்பட்டுள்ள உடல் நலப் பிரச்சனைகள் நீங்கி வாழ்வில் வளமும் நலமும் பெற அமைதியான தெளிவான மனநிலை பெற தேக பலம் ஆன்ம பலம் மனோ பலம் பெற எல்லாம் வல்ல இறைவனையும் ஞானிகளையும் சித்தர்களையும் குருமார்களையும் பிரார்த்தனை செய்துகொள்ளுமாறு பாதம் பணிந்து வேண்டுகிறேன்.

6. நண்பர் ஒருவருக்கு மன குழப்பங்கள் நீங்கி கூடிய விரைவில் அவருக்கு ஏற்ற வேலையும் மற்றும் பொருளாதார வளர்ச்சியும் கிடைத்திட அனைத்து குருமார்களுக்கும் மற்றும் அனைவரும் பிரார்த்தனை செய்து கொள்ளும்படி வேண்டிக்கொள்கிறேன்.

7. நண்பர் ஒருவருக்கு கூடிய விரைவில் நல்ல வேலை கிடைத்து வாழ்வாங்கு வாழ்வதற்கு அனைவரும் பிராத்தனை செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன் 

8. நண்பருக்கு ஏற்பட்டுள்ள முதுகு வலி,கால் வலி தீர்ந்து அவருக்கு உடல் நலம், மன பலம், ஆன்ம பலம், தேக பலம் அனைத்தும் கிடைத்து வாழ்வாங்கு வாழ்வதற்கு அனைவரும் தொடர்ந்து பிரார்த்தனைகள் செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.

9. குருவே சரணம் குருவின் திருவடி சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏. குருமார்களின் அருளால் என் பொதுத் தேர்வை நன்றாக எழுதிவிட்டேன் என் விடைத்தாள் அதிக மதிப்பெண் போடுபவர்களிடம் கிடைத்து அவர்கள்  எனக்கு நிறைய மதிப்பெண் போட்டு நான் 96% க்கு மேல் எடுக்க அருள்புரிந்து நான் 11ஆம் வகுப்பு நல்ல பள்ளியில் நல்ல குருப்  எடுத்து என் வாழ்வில் நான் ஆரோக்கியமாகவும், வாழ்வில் உயர்ந்து ஆனந்தமாக வாழ, குருமார்களின் அனைவரின் பாதம் பணிந்து கேட்டுக் கொள்கின்றேன். குருவே சரணம் குருவின் திருவடி சரணம்.

10. இன்றைய நாள் இனிய நாளாக அனைவருக்கும்  அமைந்து சிறப்பான முறையில் வாழ்வாங்கு வாழ்வதற்கு அனைவரும் தொடர்ந்து பிரார்த்தனைகள் செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றோம் 

11. நண்பருக்கும் அவரது மனைவிக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் நீங்கி சிறப்பான முறையில் வாழ்வாங்கு வாழ்வதற்கு அனைவரும் தொடர்ந்து பிரார்த்தனைகள் செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றோம்

12. Allergy பிரச்சனையல் அவதியுரும் நண்பருக்கு கூடிய விரைவில் உடல் பலம், ஆத்மா பலம், தேக பலம் பெற்று உடல் நலம் பூரண குணமடைய அனைவரும் தொடர்ந்து பிரார்த்தனை செய்ய வேண்டுகிறோம்.

13. சுவாசம் சம்மந்தப்பட்ட பிரச்சனையால் அவதியுரும் நண்பருக்கு கூடிய விரைவினில் உடல் நிலை முழுமையாக சரி ஆகி உடல் பலம், ஆத்ம பலம் பெற அனைவரும் பிரார்த்தனை செய்யும்படி வேண்டுகிறோம்.

14. நண்பர் ஒருவருக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து பொருளாதாரத்தில் முன்னேற்றங்கள் ஏற்பட்டு அவருடைய முயற்சிகள் செயல்பாடுகள் அனைத்தும் வெற்றி பெற அனைவரும் தொடர்ந்து பிரார்த்தனைகள் செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றோம்.

15. வம்சங்கள் விருத்திக்காக காத்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் கூடிய விரைவிலே வம்சங்கள்  தழைத்தோங்கி வாழையடி வாழையாக வாழ்வாங்கு வாழ்வதற்கு அனைவரும் தொடர்ந்து பிரார்த்தனைகள் செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றோம்

16. நண்பர் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருப்பதால் கூடிய   விரைவில் குணமாகி அவர் உடல் பலம் மனம் பலம் ஆத்ம பலம் தேகபலம் அனைத்தும் கிடைத்து குடும்பத்துடன் ஒற்றுமையுடன் மன அமைதியுடனும் வாழ்வாங்கு வாழ்வதற்கு பிரார்த்தனைகள் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்

17. கடுமையான தலைவலியில் அவதியுறும்  நண்பர் ஒருவருக்கு கூடிய விரைவில் ஆரோக்கியமான உடல்நிலையும் ஆரோக்கியமான மனநிலையும் கிடைத்து உடல் பலம் மன பலம் தேக பலம் ஆத்ம பலம் அனைத்தும் கிடைத்திட அனைவரும் தொடர்ந்து பிரார்த்தனைகள் செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றோம்

18. நண்பருக்கு ஏற்பட்டுள்ள முதுகு வலி,கால் வலி தீர்ந்து அவருக்கு உடல் நலம், மன பலம், ஆன்ம பலம், தேக பலம் அனைத்தும் கிடைத்து வாழ்வாங்கு வாழ்வதற்கு அனைவரும் தொடர்ந்து பிரார்த்தனைகள் செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.

19. நண்பர் ஒருவருக்கு கூடிய விரைவில் நல்ல வேலை கிடைத்து வாழ்வாங்கு வாழ்வதற்கு அனைவரும் பிராத்தனை செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.

20. தற்போது இருக்கும் பணியில் எந்த வித பிரச்சனைகளும் சிக்கல்களும் அவப்பெயரும் ஏற்படாத வண்ணம் சிறப்பான முறையில் பணியாற்றி நற்பெயரும் முன்னேற்றமும் பெற எல்லாம் வல்ல இறைவனையும் ஞானிகளையும் சித்தர்களையும் குருமார்களையும் பிரார்த்தனை செய்துகொள்ளுமாறு பாதம் பணிந்து வேண்டுகிறேன்.

21. குருவின் ஆசியால் இந்நாள் மிகவும் நன்னாளாக அமைய வேண்டுகிறேன்.

Comments